ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து கோவையில் வணிகர்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும்,உடனடியாக அதனை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பாக மண்டல தலைவர் சூலூர் சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் இருதயராஜா முன்னிலை வகித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சூலூர் சந்திரசேகரன், ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய அளவில் ஒட்டு மொத்த வணிகமும் பாதிக்கப்பட்டு வியாபாரம் சீர்குலைந்து வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் தற்போது 37 சதவீதம் வரை சிறுவணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் என நினைக்கக்கூடாது. ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகம் முடங்கி ஒட்டு மொத்தமாக வணிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.ஆர்ப்பாட்டத்தின் போது ஆன்லைன் வணிக நிறுவனங்களை கண்டித்தும்,ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு தடை செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சௌந்தர்ராஜன்,கணேசன், வேலுமயில் உட்பட பல்வேறு மகுதிகளை சேர்ந்த வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.