நான் வெங்காயமோ, பூண்டோ அதிகம் சாப்பிடுவதில்லை

வெங்காயமோ, பூண்டோ சாப்பிட தான் அதிக அக்கறை கொண்டதில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

வெங்காய விலை உயர்வு இல்லத்தரசிகளை கடுமையாக பாதித்திருக்கிறது என்றும் கூடுதல் அளவிலான வெங்காயத்தை சேமித்து வைக்கும் நவீன தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை எனவும் தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே மக்களவையில் தெரிவித்திருந்தார்.

 

இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். அப்போது இடைமறித்த சில எம்பிகள் வெங்காயம் அதிகமாக பயன்படுத்துவதில்லையா என கேள்வி எழுப்பினர்.

 

இதற்கு பதிலளிக்கும் வகையில் தாம் வெங்காயமும், பூண்டும் சாப்பிடுவதில்லை என்றும் அதுகுறித்து எம்பிக்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.


Leave a Reply