தொடர்ந்து அதிகரித்து வரும் பெரிய வெங்காயம் விலை,சென்னையில் இன்று கிலோ ரூ.130ஐ தொட்டது. இது, நடுத்தர- ஏழை மக்களுக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது.
நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்கிறது. எனினும் அதன் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.
தமிழகத்திற்கு சென்னைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் நாசிக் பகுதிகளில் இருந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, நாளொன்றுக்கு 90 லாரிகளில் பெல்லாரி வெங்காயம் வரத்து இருந்த நிலையில், வரத்து பாதிக்கு பாதியாக குறைந்துவிட்டது.
சென்னை கோயம்பேட்டில் நாசிக் வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கும், கர்நாடகாவில் இருந்து வரும் வெங்காயம் ரூ.80-க்கும், ஆந்திராவில் இருந்து வரும் வெங்காயம் ரூ.60-க்கும் விற்கப்பட்டு வந்தது. சாம்பார் வெங்காயம் விலை ரூ. 150 ஐ தொட்டது.
இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரியவெங்காயம் ரூ.100இல் இருந்து விலை அதிகரித்து 130 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. சின்னவெங்காயம் வரத்து சீராக உள்ளதால் அதன் விலையில் மாற்றமின்றி, தொடர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அன்றாட சமையலுக்கு மிக அத்தியாவசியமான வெங்காயம் விலை கட்டுக்குள் செல்லாமல் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவது நடுத்தர, ஏழைகளுக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்
அமைச்சர் பொன்முடி பேச்சு.. வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!