போக்குவரத்து விதிமீறலில் தமிழகம் தான் முதலிடம்!
மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 577 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பது மத்திய அரசின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கவும் சாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது.
இந்த சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 5707.5 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார். மோட்டார் வாகன சட்டத்தில் சில விதிமுறைகள் திருத்தப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு சுமார் 38 லட்சத்து 39 ஆயிரத்து 406 அபராத செலான்களை வழங்கியிருப்பது இந்த புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
தேசிய தகவல் மைய தரவுத் தளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமல்படுத்தியுள்ள தமிழகத்தில் மட்டும் இந்த மூன்று மாதங்களுக்குள் சுமார் 14 லட்சத்து 13 ஆயிரத்து 996 செலான்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் சுமார் 27 கோடியே 75 லட்சத்து 81 ஆயிரத்து 250 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான அபராத செலான்கள் வழங்கி இருப்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.
.58 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டு வெறும் 7800 ரூபாய் மட்டுமே அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டு இருப்பதால் குறைந்த செலான்களை வழங்கிய மாநிலமாக கோவா இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




