உலக நீரிழிவு நோய் தினம் இன்று! கட்டுப்படுத்துவது எப்படி?

உலக நீரிழிவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே அதிகம் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் உள்ளது. உடலில் சேரும் சர்க்கரை ஆற்றலாக மாற்றப்படாத பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

 

கணையத்தில் உள்ள பீட்டா செல்களால் சுரக்கப்படும் இன்சுலின் ஹார்மோன் சுரக்காவிட்டால் அல்லது இன்சுலின் சுரப்பு சரியாக இல்லாத நிலையை நீரிழிவு என்று அழைக்கிறோம். உலக அளவில் இந்த நோய் தாக்கம் அதிகம் என்றாலும் இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உலக நீரிழிவு நோய் தடுப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

 

முறையான வாழ்வியல் பழக்கங்களால் நீரிழிவு நோயை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள் .கேழ்வரகு, சாமை, தினை, வரகு போன்ற சிறு தானியங்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

இந்திய மசாலாப் பொருட்களான மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் போன்றவையும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. கொழுப்பு, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது அவசியம் என கூறப்படுகிறது. இதேபோல் 25 வயதைக் கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்வதும், நீரிழிவு நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


Leave a Reply