ஓடிசா மாநிலத்தில் இறால் பதனிடும் தனியார் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். பலருக்கு மூச்சடைப்பு, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் என உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன.
அவர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அனைவருக்கும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.பிளீச்சிங் பவுடர் உடன் தண்ணீரை கலந்ததால் மயக்கம் ஏற்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
அம்மோனியா வாயு, குளோரின் என முரண்பட்ட தகவல்களையடுத்து மூத்த காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.