விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுக்கவுள்ள நாசா ஆர்பிட்டர்

நிலவில் தரையிறங்க விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டர் புகைப்படம் எடுக்க உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் இரண்டு விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குவதற்கு சிறிது தொலைவிலேயே இருந்திருக்கிறது .

 

அந்த நிலையில் சிக்னல் துண்டிக்கப்பட்டது விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறங்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த நாசாவும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது .

 

நேற்று இருந்து நாசா ஹலோ மெசேஜ் அனுப்பி வருகிறது. இந்த நிலையில் நாசா கடந்த 2009 ஆம் ஆண்டு அனுப்பிய ஆர்பிட்டர் அடுத்த சில நாட்களில் விக்ரம் லேண்டர் தரையிறங்க பகுதியை கடக்க இருப்பதாகவும் அப்போது அதை புகைப்படம் எடுக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படங்களை நாசா அனுப்பிய பின் விக்ரம் லேண்டரின் நிலை என்னவென்பது தெரியவரும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply