“முதல்வர் இஸ்ரேல் செல்வதில் தவறில்லை” : ஹெச். ராஜா

விவசாயிகள் பெயரில் பெருமுதலாளிகள் வங்கிகளில் நகை கடன்களை வாங்குவதை தடுக்கவே நகை கடன் வழங்குவதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார் .புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது ப சிதம்பரத்தை போன்று தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என தெரிவித்தார். இலவச இணைப்பில் உள்ள ஒரு கட்சியை கழட்டி விடுவது திமுகவிற்கு நல்லது என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பது தவறில்லை என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

 

விவசாயிகள் என்ற பெயரில் பெரிய முதலாளிகள் விவசாய நகை கடன் வாங்குவதை எதிர்த்து உண்மையான விவசாயிகளுக்கு நகை கடன்களை வழங்க வேண்டும் என்பதற்காகவே நகை கடன் வழங்குவதில் மத்திய அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறினார்.


Leave a Reply