தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தை சேர்ந்தோர் கடந்த ஒன்றரை மாதங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் கிராமத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். காய்ச்சலால் பாதிக்கப் படுபவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் வீடு திரும்பிய சில நாட்களில் மீண்டும் காய்ச்சல் வந்து விடுவதாகக் கூறுகின்றனர். எனவே மருத்துவக் குழுக்களை தங்களுக்கு வரச்சொல்லி சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் கேட்டபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளத சுண்டக்கா பட்டி கிராமத்தில் மருத்துவ முகாம் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.