டெங்கு பாதிப்பைக் ‌கட்டுப்படுத்த தீவிர நடவ‌டிக்கை: விஜயபாஸ்கர்

நடப்பாண்டில் டெங்கு பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை தொற்று நோய் ஒழிப்பு மற்றும் டெங்கு நடவடிக்கை குறித்து அமைச்சர் எஸ் பி வேலுமணி விஜயபாஸ்கர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இதில் வடசென்னை பகுதிகளில் தொற்று நோயை கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டதாகவும் அடுத்த மாதம் முதல் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply