தனது தாயின் பிரசவத்திற்கு உதவிய செவிலியரை அரவணைத்த ராகுல்

கேரளா சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் பிறந்த போது செவிலியராக பணியாற்றிய பெண்ணை சந்தித்தபோது அரவணைத்து கொண்டார். சோனியா காந்தி ராகுலை பிரசவித்தபோது செவிலியர் ராஜம்மா என்பவர் மிகவும் உதவிகரமாக இருந்ததாகவும், அவர் கோலிகூட்டில் தான் இருக்கிறார் என்றும் கேள்விபட்ட ராகுல், அவரது வீட்டிற்கு சென்றார்.

 

ஓய்வு பெற்ற செவிலியரான ராஜம்மாளை சந்தித்து கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ராகுல் தன்னை அரவணைத்ததை கண்டு ராஜம்மா மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்.


Leave a Reply