இரவோடு இரவாக ஆயிரத்து ஐநூறு பணியாளர்களுக்கு பணி ஆணை!எஸ்.நாகராஜன் அதிரடி

மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் இடமாற்றம் செய்யபட்ட நிலையில் இரவோடு இரவாக ஆயிரத்து ஐநூறு பணியாளர்களுக்கு அவர் எப்படி பணியானை வழங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் ஒருவர் அனுமதியின்றி நுழைந்ததையடுத்து , அப்போதைய ஆட்சியர் இடமாற்றம் செய்யபட்டு மதுரை ஆட்சியராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டார்.ஒரு மாத காலம் மட்டுமே ஆட்சியராக இருந்தாலும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை அனைத்து தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் காலியாக இருந்த ஆயிரத்து ஐநூறு அங்கன்வாடி ,சத்துணவு பணியாளர் இடங்களை நிரப்ப 2017 ஆம் ஆண்டு விண்ணப்பம் தரப்பட்டு, நேர்முகத்தேர்வு முடிந்தது.

 

இரண்டு ஆண்டுகள் ஆகியும் பணிஆணை கிடைக்கவில்லை என ஏராளமானோர் ஆட்சியர் எஸ்.நாகராஜனிடம் புகார் அளித்தனர். உடனடியாக அதிகாரிகளிடம் ஆலோசனை  நடத்திய அவர் அரசியல் சிபாரிசுகளை தவிர்த்து மாற்று திறனாளிகள், விதவைகள் என கஷ்டப்படும் நிலையில் உள்ள தகுதி ஆனவர்களை தேர்ந்துதெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

தகுதியான 1500 பேரை தேர்வு செய்யும் பணிகள் மிக ரகசியமாக நடைபெற்றன.இரவு 9 மணிக்கு 13 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த அதிகாரிகளிடம் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. அவர்கள் தேர்வானோரின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பணி ஆணைகளை வணங்கி உடனே பணியில் சேர்ந்ததாகவும் கையெழுத்து வாங்கினார். சிபாரிசுகளுடன் ஏராளமானோர் காத்திருந்த நிலையில் நேர்மையான முறையில் தகுதியானவர்களுக்கு பணியானைகளை வணங்கிய எஸ். நாகராஜனின் செயல் பலரிடம் பாராட்டை பெற்றுள்ளது.


Leave a Reply