தனிநபர் கழிப்பிடத்தில் தமிழக அரசின் லோகோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறிய ஊழல்!

உத்திர பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கிழ் கட்டப்பட்ட கழிப்பறைகளில் தமிழக அரசின் சின்னம் பதிக்கப்பட்ட டைல்ஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலே கழிப்பறைகள் கட்டுவதற்க்கு மத்திய அரசு நிதி உதவி செய்து வருகிறது.இந்த நிதி உதவியின் மூலமாக குறிப்பாக கிராமப்புற பகுதிகளிலே பொது மக்களுக்கு கழிப்பறைகள் கட்டி தரப்படுகிறது. இது போல உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திலே உள்ள வீட்டில் கழிப்பறைகள் கட்டும் போது அங்கே அதற்கு பதிக்கப்பட்ட டைல்ஸில் மகாத்மா காந்தியின் உடைய புகைப்படம் தமிழக அரசின் சின்னம் அதில் வாய்மையே வெல்லும் என தமிழில் எழுதப்பட்டுள்ளது.இது போன்ற டைல்ஸை உபயோகித்து கழிப்பறைகள் பதிக்கப்பட்டிருப்பதாக புகார் வந்து இருந்தது.

இதனையடுத்து அந்த கழிப்பறையில் உள்ள டைல்ஸ் உடைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.யார் இதற்க்கு காரணம், தமிழக அரசின் சின்னம் பொறித்த டைல்ஸ் எப்படி கிடைத்தது, அதே போல மகாத்மா காந்தியின் புகைப்படம் உள்ள டைல்ஸ் எல்லாம் கழிப்பறையில் ஒட்டபட்டது எப்படி என்ற விசாரணைகள் எல்லாம் நடந்து கொண்டு வருகின்றன.யார் இதன் சம்பந்தப்பட்ட பணியை நடத்தி வந்தது, எங்கிருந்து இதைபோன்ற டைல்ஸை கொண்டு வந்து இங்கு பதிக்கப்பட்டிருக்கிறது போன்றவை குறித்து ஆய்வு செய்யபட்டு வருகிறது.

 

இதை ஆய்வு செய்து கொண்டிருந்த போது உடனடியாக சம்பந்தபட்டவர்கள் அதை இடிக்க முயன்றதாகவும் பணியை அங்குள்ள 18 வயதிற்க்கும் சிறியவர்களை வைத்து செய்ததாக புகார் வந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த டாய்லெட் கட்டும் பணியில் பெரிய அளவிற்க்கு ஊழல் ஏற்பட்டிருக்கிறது.அதன் காரணமாக தான் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது, என்று புகார் கூறப்பட்டிருக்கிறது.


Leave a Reply