ஐயப்பன் கோவிலில் நுழைய முயன்ற இரு பெண்கள்! சபரிமலையில் மீண்டும் பரபரப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நுழைய முயன்ற தமிழக பெண் உட்பட இருவரால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

 

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில், வைகாசி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட்டது. இக்கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெண்கள் சிலர் கோவிலுக்கு வர முயல்வதும், இந்து அமைப்பினரால் தடுக்கப்படுவதும் நடக்கிறது.

 

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட இரண்டு பெண்கள், நேற்று நுழைய முயன்றனர். எனினும், பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கோவிலுக்குள் செல்லாமல் அவர்கள் திரும்பினர். இச்சம்பவம் சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a Reply