முதல் தீவிரவாதி இந்து என்பது சரித்திர உண்மை! பிடிவாதமாக கருத்தில் உறுதியாக இருக்கும் கமல்!!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை என்று, சர்ச்சை பேச்சுக்கு பிறகு, திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

 

திருப்பரங்குன்றம் தேர்தல் பிரசாரத்தில், மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் பேசியதாவது:

 

அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்பேன். கோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எனது பேச்சை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவும் இல்லை.

 

அதேபோல், யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை ; ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும். உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு நல்ல மருந்தாகும்.

 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. மதச் செருக்கு, சாதிச் செருக்கு எல்லாம் நிற்காது ; நான் சொன்னது சரித்திர உண்மை. இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம் என்று கமல்ஹாசன் பேசினார்.

 

இந்து தீவிரவாதி என்ற கருத்தில் மாற்றமில்லை என்று கமலஹாசன் மீண்டும் பிடிவாதமாக பேசியிருப்பது, இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply