ஸ்டாலினை சந்தித்தார் சந்திரசேகரராவ்! தேசிய அரசியல் குறித்து இருவரும் ஆலோசனை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Special Arrangements


சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சற்று முன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகளில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகரராவ் முயன்று வருகிறார். இதற்காக கேரள முதல்வர் பினராய் விஜயன், கர்னாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோரை சந்தித்துள்ளார்.

 

 

அந்த வரிசையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், இன்று மாலை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார். அவரை ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

 

அதன் பிறகு இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Leave a Reply