வெப்பச்சலனத்தால் கனமழைக்கு வாய்ப்பு! எங்கெல்லாம் பெய்யப் போகிறது தெரியுமா?

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில், இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறுகையில், வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுவையில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை, அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

 

தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல், கரூர், மாவட்டங்களில், இந்த மழையை எதிர்பார்கலாம். மற்ற பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும். சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செ.மீ., பெருஞ்சாணி, நாமக்கல் ஆகிய இடங்களில் தலா, 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


Leave a Reply