ஜெனரேட்டர் மட்டுமல்ல, அரசே பழுதாகி உள்ளது! மதுரை அரசு மருத்துவமனை பலி குறித்து கமல்ஹாசன் வேதனை!!

இன்றைய தமிழகத்தில், எல்லாம் இருந்தும் பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

மதுரை அரசு மருத்துவமனையில், மின்தடையால் நோயாளிகள் ஐந்து பேர் இறந்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

 

டெல்லியில் இருந்து ஜெனரேட்டரை வைத்து இயக்கினாலும், இங்கு பழுதுபட்டு கிடக்கும் தமிழக அரசை சரிசெய்ய முடியாது. எல்லாம் இருந்தும் பழுதுபட்டு இருக்கிறது என்பது தான் இன்றைய தமிழக அரசின் நிலையாகும்.

 

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை, எந்த காரணத்திற்காகவும் திறக்க கூடாது. தற்போது மறுவாக்குப்பதிவு பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். இது சந்தேகத்தை எழுப்புகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.


Leave a Reply