தந்தையாலே ஒன்றும் முடியவில்லை; மகன் என்ன செய்யப்போகிறார்? ஸ்டாலின் குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ்.காட்டம்

அதிமுகவை அசைக்க, தந்தையாலேயே முடியவில்லை; மகன் ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது என்று, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

 

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து இருகூர், சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

 

தொலைநோக்கு திட்டங்களை தந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பெண்களுக்கான நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தார். பொங்கல் பரிசாக 1000 ரூபாய் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.வ றுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அடித்தட்டு மக்களுக்காக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருந்த நிலையில், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.

 

திமுக ஆட்சியில் கடும் மின்வெட்டு இருந்து வந்தது. அதிமுக அரசு பதவியேற்ற ஒரே ஆண்டில் மின்மிகை மாநிலமாக மாற்றிக்காட்டினார் ஜெயலலிதா. தமிழகம் தற்போது அமைதி தவழும் மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

 

 

இந்த தேர்தலில் அதிமுக காணாமல் போய்விடும் என்கிறார் ஸ்டாலின். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் மக்களின் நன்மதிப்பை பெற்ற கட்சி இது. அதனை எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாது. அவரது தந்தையால் முடியாததா, மகன் ஸ்டாலினால் முடியும். அவரால் அசைக்க முடியாது.

 

திமுக ஆட்சி பல கோடிக்கணக்கான சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டது. 32 ஆண்டுகள் அம்மாவுடன் இருந்து துரோகம் செய்தவர்கள் உருப்பட்டதாக வரலாறில்லை. காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதி தீரப்பு திமுக – காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அளிக்கப்பட்டது. ஆனால், 2013 ஆம் ஆண்டு நடுவர் நீதிமன்ற தீர்ப்பினை அரசாணையாக பெற்றுத்தந்தது அதிமுக அரசு தான்.

 

ஜல்லிக்கட்டு போட்டி நடக்க விடாமல் காளைகளை காட்சிப்படுத்தப்பட வேண்டிய விலங்குகளின் பட்டியல் இனமாக அறிவித்தது திமுக அரசு. அப்போது, தாம் முதல்வராக இருந்த காலத்தில் ஒரே நாளில் 4 துறைகளின் அனுமதியை பெற்றுத்த ந்ததே தனது மிகப்பெரிய சாதனை.இவ்வாறு அவர் பேசினார்.

 

ஓ.பி.எஸ். பேசிக் கொண்டிருந்த போது, ஆம்புலன்ஸ் ஒன்று குறுக்கிட்டது. உடனே அதற்கு வழி விடும்படி தொண்டர்களை அவர் கேட்டுக் கொள்ள சிரமமின்றி, ஆம்புலன்ஸ் கடந்து சென்றது.


Leave a Reply