அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு என்னாச்சு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு இருதய கோளாறு பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு ஆஞ்சி சிகிச்சை நடந்ததாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சிகிச்சைக்கு பிறகு மதுசூதனன் உடல் நலன் தேறி வருவதாகவும், கவலைப்படும்படி ஒன்றுமில்லை என்றும், அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.


Leave a Reply