எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் தீரவில்லையா? ஒருமுறை இங்கே போய் வந்தால் மாற்றம் வரும்!

தீராத கடன் தொல்லையால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி வருபவர்கள், கும்பகோணம் அருகே உள்ள, கடன் பிரச்சனை தீர்க்கும் ஸ்தலமான திருச்சேறை ஸ்ரீ சாராபரமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று வந்தால், நல்ல மாற்றம் உண்டாகும்.

 

இத்தலம், தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் ஒன்று; அதாவது, காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95வது திருத்தலம், திருச்சேறை ஆகும். கும்பகோணம் – திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.

 

திருச்சேறை ஸ்ரீ சாராபரமேஸ்வரர் ஆலயம்

 

ஆலயம், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டை கோபுரம், அதையடுத்து விசாலமான வெளிப்பிரகாரம் நம்மை வரவேற்கிறது. ஆலய தல விருட்சமாக மாவிலங்கை மரம் எனப்படும் மகாலிங்க மரம் உள்ளது. ராஜகோபுரத்தைத் தாண்டியதும் சிறப்பு மண்டபம், அடுத்து அர்த்த மண்டப நுழைவாசலில் துவார பாலகர்கள் அருள்பாலிக்கின்றனர். தற்கடுத்ததாக கருவறையில் எம்பெருமான் ஸ்ரீசாராபரமேஸ்வரர், லிங்க வடிவில் அருள்பாலித்து வருகிறார்.

 

 

இந்த ஆலயத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முதலாவது, பிந்து சுதா தீர்த்தம். இது, அமுதத்தில் ஒரு துளி விழுந்ததால் ஏற்பட்ட தீர்த்தம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அடுத்து ‘ஞான தீர்த்தம்’ எனப்படும் கோவிலில் எதிரே உள்ள குளம் ஆகும். மூன்றாவது தீர்த்தமாக ‘மார்க்கண்டேய தீர்த்தம்’ ; இது ஆலய தெப்பக்குளம் ஆகும்.

 

ஞானம் இருந்தால் மட்டுமே, செல்வத்தை காப்பாற்ற முடியும். பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இங்குள்ள இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் பரிகார தெய்வமாக ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’ விளங்குகிறார்.

 

கடன் தீர்க்கும் பரிகால தலமான திருச்சேறையில் லிங்க வடிவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சாராபரமேஸ்வரர்.

 

மனிதனாக பிறந்தவருக்கு பிறவிக்கடன் என்ற பெரும் கடனுடன், பொருள் கடனும் உண்டாகிறது. ரிண விமோசன லிங்கேஸ்வரரை வழிபடுவதால், இந்த இரண்டு கடன்களில் இருந்து விடுபடலாம். இங்கு, தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும். குறைந்த கட்டணத்தில் 10 வாரங்களுக்கு அர்ச்சனை செய்து, இங்குள்ள சிவாச்சார்யார்கள், நம் வீட்டிற்கே பிரசாதமும் அனுப்பி வைக்கின்றனர்.

 

மேலும் விவரங்களுக்கு: – ஆலய சிவாச்சார்யார் ஸ்ரீ சுந்தரமூர்த்தி குருக்க்கள், தொடர்பு எண்: 94437 37759 என்ற எண்ணில் விவரம் அறியலாம்.


2 thoughts on “எவ்வளவு சம்பாதித்தாலும் கடன் தீரவில்லையா? ஒருமுறை இங்கே போய் வந்தால் மாற்றம் வரும்!

  1. Pingback: Masum

Leave a Reply