வடகிழக்கு மாநிலங்களை அதிரவைத்த நிலநடுக்கம்! அடுத்தடுத்து தொடர்ந்ததால் பொதுமக்கள் பீதி

அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட கிழக்கு மா நிலங்கள், நேபாளத்தில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், அண்டை நாடானா நேபாளம், திபெத் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக, நிலநடுக்கம் பதிவானது. திப்ருகார்க் மாவட்டத்திற்கு வடமேற்கில் 114 கி.மீ. தொலைவில், திபெத் எல்லைக்கு அருகே 40 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

 

அதேபோல் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இன்று காலை 6.14 மணியளவில் 4.8 என்ற ரிக்டர் அளவில் நிலஅதிர்வு உணரப்பட்டது. தொடர்ந்து, நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள நவுபிஸில் காலை 6.29 மற்றும் 6.40 மணிக்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

 

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை தகவல் ஏதும் இல்லை. எனினும் தொடர்ந்து அதிரவைத்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.


Leave a Reply