இன்று நாடாளுமன்ற 3ஆம் கட்ட தேர்தல்! 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

Publish by: பாலா --- Photo : ANI


மக்களவை தேர்தலில் 3ஆம் கட்டமாக இன்று, கேரளாவின் 20 தொகுதிகள் உட்பட, 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்திய நாடாளுமன்ற தேர்தல், தற்போது ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்து, இன்று, 3ஆம் கட்டமாக 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

 

அகமதாபாத்தில், வாக்களித்தார் பிரதமர் மோடி.

 

இதில், அசாம்- 4, கேரளா – 20, ஒடிசா -6, கோவா-2 , குஜராத் -2 6, பீகார் – 5, சத்தீஷ்கார் – 7, கர்நாடகம் – 14, மகாராஷ்டிரா – 14, உத்தரபிரதேசம் – 10, மேற்கு வங்கம் – 5, காஷ்மீர் -1, திரிபுரா – 1, தத்ராநகர் ஹவேலி -1 , டாமன் டையூ – 1 ஆகியன அடங்கும்.

 

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

இன்று தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் முக்கிய வேட்பாளர்களாக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் (வயநாடு) உள்ளனர். காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.


Leave a Reply