பிரதமர் மோடியை திருடன் என்று கூறிய சர்ச்சை! வருத்தம் தெரிவித்தார் ராகுல்

தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடியை திருடன் என்று கூறிய விவகாரத்தில், உச்ச்நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.

 

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மத்திய அரசு மீது ராகுல் காந்தி அடுக்கடுக்காக குற்றம்சாட்டி வந்தார். இதற்கிடையே இந்த வழக்கில் சீராய்வு மனு வழக்கில், கடந்த 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், விரைவில் ரபேல் விவகாரத்தில் விசாரணை தொடங்கும் என்று தெரிவித்திருந்தது.

 

இதற்கிடையே, அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “காவலாளி என தம்மை கூறிக் கொள்ளும் நபரை உச்சநீதிமன்றமே திருடன் என்று கூறிவிட்டது” என்றார்.

 

இதற்கிடையே, பாஜக டெல்லி எம்.பி மீனாட்சி லெகி, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பை திரித்துக்கூறி, தனிமனிதரான பிரதமர் மோடியை தாக்கி பேசியதாக, அதில் கூறப்பட்டிருந்தது.

 

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்தி சொன்னபடி தாங்கள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. ராகுல் காந்தி தனதுபேச்சுக்குக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

 

இந்நிலையில், மோடி குறித்து தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், பிரசாரத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் பிரதமரை திருடன் என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக தெரிவித்தேன். அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply