பொள்ளாச்சி போல் பெரம்பலூரிலும் பாலியல் கொடுமை! பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ வெளியிட்ட விஐபி!!

Publish by: --- Photo :


பொள்ளாச்சியை போலவே, பெரம்பலூரிலும் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, அப்பகுதி விஐபி ஒருவர் தனது நண்பர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதாக எழுந்த புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பெரம்பலுார் சுற்றுவட்டார பெண்களிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக, அதே பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் உறுதி அளித்துள்ளார். இதற்கான தன்னை நாடிவந்த பெண்களை அங்குள்ள விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, புகார் எழுந்துள்ளது.

 

மேலும், அதை தனது உதவியாளர் மூலம் வீடியோ எடுத்து, அந்த பெண்களை மிரட்டி, தேவைப்படும் போதெல்லாம் வரச்சொல்லி பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதாக தெரிகிறது.

 

அங்கன்வாடி பணி, ஆசிரியர் பணி உள்ளிட்டவை கேட்டு வந்தவர்களை இவ்வாறு மிரட்டி, இத்தகைய கொடுமை நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலில், தனியார் கல்லுாரி போராசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவிகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து, பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாய் ஒருவர், பெரம்பலுார் மாவட்ட காவல் உயரதிகாரி ஒருவரிடம் புகார் செய்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் மெத்தனமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதையடுத்து, அப்பகுதி வழக்கறிஞர் அருள் என்பவர், இந்த விவகாரம் குறித்து, எஸ்.பி. திஷா மிட்டலிடம் நேற்று புகார் அளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, பெரம்பலூர் ஏடிஎஸ்பி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

பொள்ளாச்சியில் மாணவியர் பலரை வன்கொடுமை செய்த விவகாரம் பூதாகரமாக கிளம்பிய நிலையில், பெரம்பலூரிலும் அதே போன்ற சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஏற்கனவே, இதே பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் என்பவர் பாலியல் பலாத்கார வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று, சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply