4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சூலூர் உட்பட தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான அ.ம.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால், இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்தது.

 

தற்போது அந்த மூன்று தொகுதிகளுடன், சூலூர் தொகுதியையும் சேர்த்து, 7ஆவது கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

 

இந்த 4 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன்  இன்று அறிவித்தார்.

 

அதன்படி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜ், சூலூர் தொகுதியில் கே சுகுமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் மகேந்திரன், அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல் ஹமீது ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 

அதிமுக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.


Leave a Reply