டென்ஷன் ஆன ‘கூல்’ கேப்டன் தோனி! வாக்குவாதம் செய்ததால் அபராதம் விதிப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல். ஆட்டத்தில், நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சென்னை அணி கேப்டன் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள் இடையே ஐபிஎல் 20 ஓவர் போட்டி, நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.  கடைசி ஓவரில் சென்னை வீரர் சாண்ட்னருக்கு,  பென்ஸ்டோக்ஸ் வீசினார். புல்டாசாக ஒரு பந்தை பென்ஸ்டோக்ஸ் வீச, அதை நோபால் என்று பிரதான அம்பயர் அறிவித்தார். ஆனால், லெக் அம்பயர் நோபால் தர மறுத்தார்.

 

 

அதிருப்தி அடைந்த சாண்ட்னர் , ஜடேஜா இருவரும் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது போன்ற தருணங்களில் கூலாக இருக்கும் தோனி, நேற்று ஆக்ரோஷப்பட்டார். மைதானத்திற்குள் வந்த அவர், நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும் நோபால் அறிவிக்கப்படவில்லை.

 

இந்நிலையில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம், போட்டிக்கான சம்பளத்தில் 50 சதவீதம் தொகையை அபராதமாக விதித்தது.


Leave a Reply