விபத்தில் காயமடைந்த பத்திரிகையாளருக்கு உதவி செய்த ராகுல் காந்தி

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளரான ராஜேந்திர வியாஸ் என்பவர் இன்று மத்திய டெல்லிக்கு உட்பட்ட ஹுமாயூன் சாலையில் விபத்தில் சிக்கி ரத்த காயங்களுடன் துடித்துக் கொண்டிருப்பதை அவ்வழியாக காரில் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவனித்தார்.


உடனடியாக காரை நிறுத்துமாறு கூறி காயமடைந்த பத்திரிகையாளரை உள்ளே ஏற்றிக்கொண்டு விரைவாக மருத்துவமனக்கு செல்லுமாறு டிரைவரிடம் கூறினார்

ராகுல் காந்தியின் கார் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வலியால் துடித்த பத்திரிகையாளரின் நெற்றியில் உள்ள காயத்தில் இருந்து வழியும் ரத்தத்தை துடைத்தவாறு அவர் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தும் காட்சியை முன்சீட்டில் அமர்ந்திருந்த ராகுலின் உதவியாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

பரபரப்பான தேர்தல் பணிகளுக்கு இடையில் மனிதாபிமானத்தோடு செயல்பட்ட ராகுல் காந்தியின் ‘உரிய நேரத்து உதவிக்கு’ சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.


Leave a Reply