தேர்தல் பிரசாரத்தில் வாகன பேரணிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு

உத்தரபிரதேச போலீஸ் முன்னாள் டி.ஜி.பி. விக்ரம் சிங். இவரும், சைவிகா அகர்வால் என்பவரும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், தேர்தல் பிரசாரத்தின்போது, வேட்பாளர்கள் வாகனங்களில் வீதி வீதியாக உலா வருவதற்கும், மோட்டார் சைக்கிள் பேரணி நடத்துவதற்கும் தடை விதிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுமாறு அவர்கள் கோரி இருந்தனர்.

இத்தகைய பேரணிகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இச்செயல், தேர்தல் கமிஷன் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் கூறி இருந்தனர்.

இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபிகா குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வக்கீல் விராக் குப்தா ஆஜரானார்.

அவரைப் பார்த்து, “இந்த மனுவை நாங்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை” என்று நீதிபதிகள் கூறினர். மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Leave a Reply