பட்டைய கிளப்பிய பண்ட்….: சொந்த மண்ணில் மண்ணைக்கவ்விய ‘டான்’ ரோகித்தின் மும்பை!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹைலைட்ஸ்
மும்பை அணி , 19.2 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் நேற்று சென்னையில் துவங்கியது.
நாக் -அவுட் இல்லை:
லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது. வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது. இன்னும் நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை வெளியிடவில்லை.இந்நிலையில் மும்பையில் நடக்கும் மூன்றாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

யுவராஜ் அரைசதம்:
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தனியாளாக போராடிய யுவராஜ் சிங், அரைசதம் (53) கடந்து வெளியேறினார். இதையடுத்து மும்பை அணி , 19.2 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது


Leave a Reply