--- --:--:-- --

அவினாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 200பேர் பாஜகவில் இணைந்தனர்.

12

திருப்பூர் அருகே அவிநாசி கோவை சட்டமன்றத் தொகுதி தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பாஜகவின் 13 வது பிரச்சார பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பொதுக்கூட்டமானது மாவட்டச் செயலாளர் கஸ்தூரி பிரியா ஏற்பாட்டிலும், மாவட்ட தலைவர் கரு.மாரிமுத்து முன்னிலையிலும் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மோகனசுந்தரம், விசைத்தறி சம்மேளன  மாநில  குழு உறுப்பினர் மூர்த்தி, புதுப்பாளையம் வார்டு உறுப்பினர் தேவிகா, செல்வம்,நடராஜ்,வேலுச்சாமி, கணேசன் சாமுவேல்,பூபதி உட்பட 200 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.
அவர்களுக்கு கட்சியின் சால்வை துண்டுஅணிவித்து வரவேற்றனர்.இந் நிகழ்வில் கட்சி தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Right Menu Icon