2 நாளில் 30 பேரை கடித்து குதறிய நாய்..!
மத்திய பிரதேசத்தில் 5 வயது சிறுமியை நாய் வந்து துரத்தி வந்து கடித்து குதறும் வீடியோ வெளியாகியுள்ளது. புத்திசா நகரில் சுற்றித் திரியும் நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் சிறுமியை நாய் துரத்தி கொண்டு வந்து காலில் கடித்து குதறும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 2 நாட்களில் மட்டும் 30 பேரை நாய் கடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 24 பேர் நாய் கடியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாய் கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி சிறுவன் உட்பட 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





