நிலவுக்கு மனிதர்களை அனுப்ப 18 பேர் தேர்வு..!
நிலவுக்கு செல்லும் வீரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உட்பட 18 பேரின் பெயர்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைத்துள்ளது. இரண்டாவது முறையாக நிலவுக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் நாசா ஈடுபட்டு வருகிறது.
இதற்கு ஆர்டமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜாச்சாரி என்பவர் உட்பட 9 ஆண் மற்றும் 9 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை துணை அதிபர் மைக் பென்ஸ் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். 18 பேருக்கும் நாசா பயிற்சி அளிக்க உள்ளது. ஆர்டமிஸ் ஆட்டத்தை 2024 இல் நிறைவேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.






