நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த தினத்திற்கு மோடி வாழ்த்து..!
தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த தினத்தை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லம் முன்பு குவிந்த ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
பின்னர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ரஜினி பிறந்த நாளையொட்டி திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடியும் ட்விட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.






