--- --:--:-- --

கிராமத்திற்குள் பதுங்கி இருந்த 150 கிலோ முதலை..!

7

சிதம்பரம் அருகே கிராமத்திற்குள் பதுங்கி இருந்த முதலையை வனத்துறையினர் பிடித்து ஏரியில் விட்டனர்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிராமத்தில் குளத்து பகுதியில் ஒன்பது அடி நீளமும் 150 கிலோ எடையும் கொண்ட முதலை ஒன்று பதுங்கி இருப்பதாக சிதம்பரம் வனச்சரகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

அதன் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு முதலை லாபகமாக பிடித்து 150 கிலோ எடை கொண்ட முதலையை தோளில் சுமந்து சென்று பின்பு ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

 

Right Menu Icon