11 ஆம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து..!
பதினொன்றாம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பதினொன்றாம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் பதினோராம் வகுப்பு நுழைவுத்தேர்வு நடத்த அனுமதிக்கப்பட்ட உத்தரவு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.







