நாளை 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. அதன்படி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் இணையதளம் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தங்களது முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





