108 ஆம்புலன்சை திருடி சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்..!
டயர்களில் காற்றை நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் திருடி சென்ற சம்பவம் செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது.
மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் காற்றை நிரப்புவதற்காக 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அந்த வழியாக சைக்கிளில் வந்த இளைஞர் ஆம்புலன்ஸ் வாகனத்தை திருடி சென்றார்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அரசு பேருந்தில் சென்று ஆம்புலன்ஸை மடக்கி இளைஞருக்கு தர்மடி கொடுக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்சை திருடி சென்ற இளைஞர் பாலாஜி என்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





