--- --:--:-- --

புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை 100% தேர்ச்சி..!

6

புதுச்சேரியில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் வழக்கமாக இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே அனைவரும் தேர்ச்சி என்று கூறப்படும்.

 

ஆனால் நடப்பாண்டில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் குறைவான வருகை பதிவு, கல்வி கட்டணம் நிலுவை என எந்த காரணத்தைக் கொண்டும் தேர்ச்சி பாதிக்கப்படக் கூடாது என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவை அறிவிப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon