சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் மேலும் 42 சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல்: ஈரோடு ஆட்சியர் தகவல்
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மேலும் 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ரிசார்ட்டுகள் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி கற்பகம் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





