--- --:--:-- --

கலர் அப்பளம் விற்க தடை விதித்தது தமிழ்நாடு அரசு..!

01

திக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளங்களை விற்பனை செய்ய, தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பான எச்சரிக்கையில், “கண்ணைக் கவரும் கலர் அப்பளத்தை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம். ஏனெனில் அவை குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்” என தமிழக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

 

 

மேலும் அடிக்கடி இப்படியான கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு தொடங்கி புற்றுநோய் வருவதற்குகூட வாய்ப்பு உள்ளதாகவும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த கலர் அப்பளத்தை சாப்பிட்டால் அலர்ஜி மற்றும் கவனச்சிதறல் உண்டாகலாம் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்திருக்கிறது. இதற்கு மாற்றாக பாரம்பரியமாக தயாரிக்கப்படும் உளுந்து, அரிசி உள்ளிட்டவையில் தயாரிக்க கூடிய அப்பளத்தை வாங்கி சாப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைகள், சுற்றுலாத்தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளம் விற்பனை செய்ய வேண்டாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon