ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்: விஜய்
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஊழல், லஞ்சம் தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
கூட்டத்தில் அவர், ஊழல் லஞ்சம் முறைகேடு ஆகியவற்றில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதவிகள் பறிக்கப்படும். த.வெ.க ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்க வேண்டும் என்றும், ரீல்ஸ் எடுக்கிறேன் என்று அலப்பறை வேண்டாம் எனவும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.






