பீரியட்ஸ் டைமில் உடல் அமைப்பை வைத்து அப்படி பேசிட்டாங்க..!
Vani Bhojan At The 'Oh My Kadavule' Press Meet
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.
அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2020 ம் ஆண்டு வெளியான ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.
இப்படத்தை தொடர்ந்து வாணி போஜனுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தற்போது பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ, லவ், தாழ் திரவா, ரெக்ளா, ஆர்யன் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வாணி போஜன், நான் ஒரு விழாவில் கலந்துகொண்டேன். அந்த சமயத்தில் எனக்கு பீரியட்ஸ். முன்தினம் சரியாக தூங்கவில்லை இதனால் உடல்நிலை மிகவும் சோர்வடைந்து முகம் வீங்கி வீக்கத்துடன் வந்திருந்தேன்.
அந்த சமயத்தில் சிலர், ,வாணி போஜன் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துள்ளார் என்று செய்திகளை பரப்பினார்கள்.இதனால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதாமாதம் வரும் பிரச்சனை தான் எனக்கும் வந்தது. அதிலும் உடல் மாற்றங்கள் ஒவ்வொரு உடலுக்கு ஏற்ப முகம் பூசின மாதிரி இருக்கும். அதைவைத்து தப்பான செய்திகளை எழுதிக்கிறார்கள் என்று வாணி போஜன் பேசியுள்ளார்.






