--- --:--:-- --

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதால் நேரடி வகுப்புகளை தொடங்கக் கோரி வழக்கு.!

6

ல்வியை எளிதில் அணுகக்கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் உடல் நலம் சரியில்லாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

 

ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி ஊழியர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கி மீண்டும் நேரில் வகுப்புகளை தொடங்க உத்தரவிடக்கோரி நேர்வழி இயக்கம் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உடல்நலம் சரியில்லாதவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Right Menu Icon