--- --:--:-- --

தவறான உடல் தேடல்! காதலர் தினத்தன்று மனைவிக்கு துன்பத்தில் முடிந்த கதை!

4

சேலம் மாவட்டத்தில் நடுவலூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் மனைவி ப்ரியா மற்றும் 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னதுரை என்பவருக்கும் பிரகாஷின் மனைவி ப்ரியாவிற்கும் கடந்த ஒரு ஆண்டாக நெருக்கமான பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில், பிரியா கோபித்துக்கொண்டு தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து கடந்த 3 ஆம் தேதி கங்கவல்லி காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரையடுத்து இருவரையும் அழைத்து பேசிய போலீசார் கணவன், மனைவியை சமரசம் செய்து சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

 

இந்நிலையில் காதலர் தினமான வெள்ளிக்கிழமை அன்று பிரியா நீண்ட நேரமாக வீட்டில் இல்லை. அவரது தாயாரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லாததால் சந்தேகமடைந்த பிரகாஷ் மனைவியிடம் நெருக்கமாக பழகி வந்த சின்னதுரையின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அங்கு ஜன்னல் வழியாக பார்த்தபோது இருவரும் தனிமையில் இருந்ததை கண்டு அதிர்ந்த பிரகாஷ் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டு முன்புற கதவை வெளிப்புறமாக தாளிட்டு விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு கோபம் அதிகரிக்கவே அரிவாளுடன் சின்னதுரையின் வீட்டிற்கு சென்ற பிரகாஷ் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று படுக்கை அறையில் இருந்த இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

 

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் கணவர் பிரகாஷை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறான உடல் தேடல் துன்பத்திலே முடியும் என்பதற்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon