முக்கல் முனங்கள் பாடல்களுக்கு டிக் டாக் செய்த சகந்தி! விரட்டிய மதுரை மக்கள்..!
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதுரை சுகந்தி என்பவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலம். கணவர் பட்டாளத்தில் வேலை பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி டிக்டாக்கில் முக்கல், முனங்கள் பாடல்களுக்கு வீடியோ வெளியிட்டு ஆண் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் போக்கும், வரத்தும் ஆக இருந்ததால் சுகந்திக்கு டிக்டாக்கில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதற்கும் அசராமல் சுகந்தி வீடியோ பதிவிட்டு வந்தார். அண்மையில் இரு பெண்கள் சுதந்திக்கும், அவரது காதலனுக்கும் எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போதுகூட காவல் நிலையத்திற்கே சென்று டிக் டாக் செய்து சவால் விடுத்தார் சுகந்தி.

இந்த நிலையில் டிக்டாக்கில் சுகந்த்திற்கும் இளைஞர் ஒருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சுகந்தியை விமர்சித்து பதிவிட்ட அந்த இளைஞர் நாகலாபுரத்தில் உள்ள பெண்களையும் சேர்த்து விமர்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகலாபுரம் கிராம மக்கள் டிக்டாக்கில் டவுன்பஸ் போல வலம் வந்த சுகந்தியையும் அவரது சகோதரியையும் ஊரைவிட்டு துரத்தியடிக்க பொங்கி எழுந்தனர்.
எக்காரணத்தைக் கொண்டும் ஊருக்குள் வரக்கூடாது என்று விரட்டிய மக்கள் சுகந்தியையும் அவரது சகோதரியையும் ஊரில் இருந்து நிரந்தரமாக வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
டிக் டாக் ஐ தடை செய்ய வேண்டும் என்று கொந்தளித்த நாகலாபுரம் கிராம மக்களிடம் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது, இதையடுத்து நாகலாபுரம் கிராம மக்கள் கலைந்து சென்றனர். டிக் டாக் மனித சமுதாயத்தை அழிவு பாதைக்கு அழைத்துச்செல்லும் தீய சக்தி என்பதை புரிந்துகொண்டு வரிந்துகட்டி தக்க பதிலடி கொடுத்த நாகலாபுரத்தில் பாராட்டுக்குரியவர்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




