கணவரை சாப்பிடக் கூறி விட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!
ஆசிரியர் பணியில் இருந்த பெண்ணின் மரணம் தலைநகர் டெல்லியை உலுக்கியுள்ளது. புகுந்த வீட்டில் அவரை பெரும் பணி பெண்ணாகவும் பொருளீட்டி வரும் நபராக மட்டுமே நடத்தியதால் மனம் வெறுத்த அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சமைத்துவிட்டேன் சாப்பிடுங்கள் என கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார். டெல்லியில் கேந்திரிய வித்யாலயா ஆசிரியராக பணியாற்றி வந்த சர்மா இறப்பதற்கு முன் தனது பெற்றோருக்கு அவர் அனுப்பிய குறுஞ்செய்தியில் தனது மாமனார் மற்றும் மாமியாருக்கு ஒரு பணிப்பெண்ணே தேவையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
தனது வங்கி கணக்கை கணவர் முழுவதுமாக வசப்படுத்திக் கொண்டு தான் என்ன செய்தாலும் தவறு கண்டுபிடிப்பதாகவும் அவர் தனது வேலையை மட்டுமே திருமணம் செய்து கொண்டதாகவும் தனக்கு ஏற்பட்ட இன்னல்களை இறுதி நேரத்தில் பதிவு செய்துள்ளார். தன் மகனை பார்த்துக் கொள்ளுமாறு தனது பெற்றோர்களிடம் வேண்டிக் கொண்டுள்ளார்.
செய்தியை கண்டு கதறிய சர்மாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் அந்திதாவின் கணவரும் மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான அவரது மாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வரதட்சனை கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.






