இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மனைவி பலி..!
பழனி அருகே நடந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் விபத்து தொடர்பான அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பழனியை சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி பழனியம்மாள்.
பாண்டியும், பழனியம்மாளும் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பழனியம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.






