மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு..!
இந்தியாவில் தினசரி கொரொனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று கொரொனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 194 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த மதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 84 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரொனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 208 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 26 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 255 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 714 ஆக அதிகரித்துள்ளது.






