--- --:--:-- --

அதிகார போதையில்’சி.இ.ஓ?!  மதுவிழிப்புணர்வு குழுவுக்கு அனுமதி மறுப்பு.. மாநகராட்சி அனுமதி கொடுத்தும் இறுமாப்பு!!

fghdg

து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, திருப்பூர் மாநகராட்சி அனுமதி தந்தும், மாவட்ட சி.இ.ஓ. அனுமதி தராததோடு அவமதித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் ஓய்வு பெறப்போகும் சி.இ.ஓ. ‘அதிகார போதை’யில் இருந்து தெளிவு பெற வேண்டுமென்று, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

தமிழகத்தில் மது பயன்பாடு அதிகமுள்ள மாவட்டங்களில், திருப்பூர் முதன்மையானது. இங்கு, மதுவின் தீமை குறித்தும், அதற்கு அடிமையானவர்களை மீட்பது குறித்தும் விழிப்புணர்வு அவசியமாகிறது. இந்த நிலையில், ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (AA) என்ற அமைப்பு, திருப்பூரில் மது விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டது.

 

அதன்படி, மதுவில் இருந்து மீட்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாணவர்களுக்கு இடையூறின்றி இரவு 7 மணி முதல், 8:30 வரை இரவு நேரத்தில், பள்ளி வளாகத்தில் நடத்த முடிவு செய்தது. இதற்காக, அந்த அமைப்பின் சார்பில், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடியிடம் அனுமதி கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

இக்காலகட்டத்தில், அதுவும் திருப்பூர் போன்ற, மதுபானம் அதிகளவில் விற்பனையாகும் நகரில், மது குறித்த விழிப்புணர்வு தேவைதான் என்று கருதிய மாநகராட்சி ஆணையாளரும், பள்ளி வளாகத்தில் பாதிப்பின்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கினார்.

 

அத்துடன், பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்துதால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும், ஒப்புதல் பெற்றுக் கொள்ளும்படி, ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்புக்கு, மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதையடுத்து, மது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அந்த அமைப்பினர், மாவட்ட சி.இ.ஓ அலுவலகத்திற்கு, அனுமதி வேண்டி சென்றுள்ளனர்.

 

அதிகார போதையில்’சி.இ.ஓ. ரமேஷ்?!

 

ஆனால், சம்மந்தப்பட்ட அமைப்பினரை மாநகராட்சி நிர்வாகம் நடத்திய முறைக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடத்தப்பட்ட முறைக்கும் இருந்த வித்தியாசம் கண்டு, அமைப்பினரே அதிர்ந்து போயினர். காரணம், முதன்மை கல்வி அலுவலகத்தில், அந்த அமைப்பினருக்கு எந்தவொரு முக்கியத்துவமும் தரவில்லை; அனுமதி கேட்கச் சென்றவகளை, உட்காரக்கூட சொல்லாமல், நிற்க வைத்தே பேசியுள்ளனர். அத்துடன், அனுமதி தர முடியாது என்பதை, அலட்சியமாகவும் அதிகார தோரணையிலும் கூறி, அவமதித்து அனுப்பி இருப்பதாக, சம்மந்தப்பட்ட அமைப்பினர் வேதனையோடு தெரிவித்தனர்.

 

இன்னும் ஓரிரு மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மதுவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வந்தவர்களை அவமதித்து அனுப்பியது, ‘அதிகார போதை’யே காரணம்; அதில் இருந்து அவர், இனியாவது தெளிவு பெற வேண்டுமென்று , சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Right Menu Icon